விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா. இவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தன் வாழ்க்கைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு ஐஸ்வர்யா தன் குடும்பத்தினருடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.
இது குறித்து விசாரணை நடத்திய போது, இவருக்கு திருமணம் ஆகி 57 நாட்கள் தான் ஆனது என தெரிய வந்தது. இந்த நிலையில் திருமணம் ஆன சில நாட்களுக்குள்ளே இவர் தன் கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியதாவது, தனக்கு திருமணம் ஆகி சில நாட்களை ஆன நிலையில் என் கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக கூறியிருந்தார்.
ஆனால் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே சமூக நலத்துறை அலுவலகங்களில் புகார் அளித்துள்ளார்.
அங்கும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்பதால் தற்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு தனக்கு நீதி வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இவர் ஆட்சியரின் காரின் முன்பு படுத்து உருண்டு போராட்டம் செய்துள்ளார்.
பின்பு சமூக நலத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பின் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை வார்த்தை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
