பயணம் மேற்கொள்வது பலருக்கும் பிடித்தமான அனுபவமாக இருந்தாலும், பெரும்பாலோர் பிரபலமான, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்ல விரும்புகின்றனர். ஆனால், சிலர் மக்கள் அதிகம் பயணிக்காத மலைகள், காடுகள் போன்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து, தனியாக டென்ட் எடுத்துச் சென்று சாகசப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இத்தகைய பயணங்களில் அவர்கள் அற்புதமான அனுபவங்களைப் பெறுவதோடு, சில நேரங்களில் ஆபத்தான சூழல்களையும் எதிர்கொள்கின்றனர். இவற்றை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிரும் கலாச்சாரம் தற்போது பரவலாகி வருகிறது. இதற்கு உதாரணமாக, ஒரு நபர் காட்டிற்குள் டென்ட் அமைத்து தங்கியிருந்தபோது, ஆயிரக்கணக்கான கொசுக்கள் அவரது கூடாரத்தைச் சுற்றி, கடிப்பதற்கும் உள்ளே நுழைய முயல்வதையும் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களிடையே பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. “ஒரே ஒரு சின்ன ஓட்டை இருந்தாலும், ஒட்டுமொத்த ரத்தமும் காலியாகிவிடும்!” என நகைச்சுவையாகவும், கிண்டலாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ, தனியாக காட்டில் பயணம் செய்யும் சாகச விரும்பிகளுக்கு, இயற்கையின் அழகையும் ஆபத்துகளையும் ஒருங்கே எடுத்துக்காட்டுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Selected Piece 🔥 (@selectedpiece605)

“>

கொசுக்களின் தாக்குதல் போன்ற எதிர்பாராத சவால்கள், இத்தகைய பயணங்களில் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. இதுபோன்ற வீடியோக்கள், சாகசப் பயணங்களின் உற்சாகத்தையும், அதில் உள்ள ஆபத்துகளையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.