பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவைச் சேர்ந்த தெரு உணவுக்கடை ஒன்றில் படம் பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கடையில், பக்கோடாக்கள் பொரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் பிளாஸ்டிக் பாக்கெட்டுடன் நேராக வாணலியில் வீசப்படும் திகிலான காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது விஷம் கொடுப்பதற்கு சமம்!” எனக் கூறி கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவில், கடைக்காரர் ஒரு முழு பிளாஸ்டிக் எண்ணெய் பாக்கெட்டை வெட்டாமல், நேரடியாக கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் போடுகிறார். வெறும் சில விநாடிகளில் பிளாஸ்டிக் உருகி எண்ணெயுடன் கலக்கிறது. இந்த செயலைப் பார்த்த உணவுப் பதிவாளர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
This street food seller has a ‘genius’ method of pouring oil – just dip the entire pouch straight into the hot pan. No cutting required!
Next up? Engine oil with a side of melted plastic for that ultimate street food flavor!
☹️☹️☹️☹️ pic.twitter.com/Mk0LItNBG0— Shashi Iyengar | Accredited Metabolic Health Coach (@shashiiyengar) August 6, 2025
“>
டையாக்ஸின், பிபிஏ, பித்தலேட்டுகள், ஸ்டைரீன் போன்ற நச்சு இரசாயனங்கள் இந்த செயலால் உணவில் கலக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது புற்றுநோய், சிறுநீரக நோய், மகப்பேறு பிரச்சனை, குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைபாடுகள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியது என்று கூறப்படுகின்றது.
You don’t need to be a doctor to know what he is doing is extremely toxic for health. One look and it’s obvious.
Still, the facts: dipping plastic pouches in boiling oil causes them to break down and release toxic chemicals like dioxins, phthalates, BPA, and styrene. These leach… pic.twitter.com/o8zgyw5fCR
— THE SKIN DOCTOR (@theskindoctor13) August 6, 2025
“>
இந்தச் சம்பவம், தெரு உணவு விற்பனையில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் எவ்வளவு அவசியமென்பதை தெளிவுபடுத்துகிறது. சுகாதாரத்தைப் பாதுகாப்பது எளிதான விஷயம் அல்ல – மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் சாப்பிடும் உணவைத் தயாரிக்கும் ஒவ்வொரு நபரும் தனது செயலில் பொறுப்பு உணர்வுடன் நடக்க வேண்டியது இப்போது முக்கியமாகியுள்ளது.
