முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளமான X தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
“தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு, முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு தான் தலைவர் கலைஞர்” என பாராட்டிய அவர், “அவரது சாதனைகள் மூலம் சிறப்படைந்த தமிழ்நாட்டை காத்திடவும், முன்னேற்றிடவும் உறுதியேற்போம். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கொள்கையின் அடிப்படையில், ‘எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ என்ற இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோடுவோம்” என தெரிவித்துள்ளார்.
தலைவர் கலைஞர் –
முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும்… pic.twitter.com/YH1tVZql61
— M.K.Stalin (@mkstalin) August 7, 2025
“>
அவரது உரை, கலைஞரின் பணிகளை நினைவுகூரும் வகையில், அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் கவனம் பெற்றுள்ளது.
