தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், பாலிவுட் சினிமாவிலும் தனது நடிப்புத் திறமையை காட்டி வருகிறார். சமீபத்தில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற புதிய இந்தி படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி கடந்த 3-ந்தேதி மும்பையில் நடைபெற்ற விருந்தில், தனுஷுடன் பிரபல நடிகை மிருணாள் தாக்கூரும் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில் கடந்த 1-ந்தேதி மிருணாள் தாக்கூரின் பிறந்தநாள் விழாவிலும், தனுஷ் கலந்து கொண்டதோடு, அவரை நேரில் சென்று மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
‘சீதாராமம்’ படம் மூலம் புகழ்பெற்ற மிருணாள் தாக்கூர், பாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் அஜய் தேவ்கன் – மிருணாள் தாக்கூர் நடித்த ‘சன் ஆப் சர்தார்’ படம் திரையிடப்பட்ட பிரிமியர் நிகழ்ச்சியிலும் தனுஷ் பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்வுகளின் பின்னணியில், இருவருக்கும் இடையே சிறப்பு நட்பு மற்றும் காதல் தொடர்பு உள்ளதாக பாலிவுட் ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருவரும் தொடர்ந்து ஒரே நிகழ்வுகளில் பங்கேற்று வருவது, இந்த தகவலுக்கு மேலும் வலுவாக அமைந்துள்ளது.
இந்த காதல் விவகாரம் பற்றி இதுவரை தனுஷ் அல்லது மிருணாள் தாக்கூர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக எந்த மறுப்பும், உறுதியும் வெளியிடவில்லை. குறிப்பிடத்தக்க விஷயமாக, தனுஷ் கடந்த ஆண்டுவரை ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் திருமண வாழ்வில் இருந்தார். இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
18 ஆண்டுகளுக்கு பிறகு, கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், தனுஷ் – மிருணாள் தாக்கூர் விவகாரம் குறித்து சினிமா வட்டாரமும், ரசிகர்களும் தீவிரமாக பேசிக்கொண்டு வருவதால், இந்த சினிமா ஜோடிக்கு இடையிலான நட்பு உண்மையில் காதலாக மாறுகிறதா? என்பது எதிர்காலத்தில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
