இந்தியாவில் மிக மலிவான விலையில் சாமானிய மக்களுக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காய், தற்பொழுது அமெரிக்காவில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கிச் சாப்பிடும் ஒரு விலையுயர்ந்த ஸ்நாக்ஸாக (Snacks) மாறிவிட்டதாகத் இந்தியர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் பலத்த அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்ற போது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெண்டைக்காயின் விலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில், அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வெறும் 85 கிராம் எடை கொண்ட வறுத்த வெண்டைக்காய் (Fried Okra) பாக்கெட் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 600 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்;
இதன்படி கணக்கிட்டுப் பார்த்தால், அமெரிக்காவில் ஒரு கிலோ வெண்டைக்காயின் விலை 7,200 ரூபாய் என்ற உச்சத்தைத் தொடுகிறது. நம்ம ஊர் சந்தைகளில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படும் வெண்டைக்காய்க்கு அமெரிக்காவில் இவ்வளவு பெரிய மவுசா என்று வியப்படைந்த நம்மூர் நெட்டிசன்கள் பலரும், “பேசாம நம்ம ஊர்ல இருந்து அமெரிக்காவுக்கு வெண்டைக்காயை ஏற்றுமதி (Export) செய்யுற பிசினஸை ஆரம்பிச்சிடலாமா?” என்று கமெண்ட்களைத் தட்டிவிட்டு, இந்த சுவாரசியமான செய்தியை இணையத்தில் அசுர வேகத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
