பிரபல நடிகை உர்வசி, தேசிய திரைப்பட விருதுகள் தொடர்பாக உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவித்துள்ளார். “சிலருக்கு விருது கொடுக்கிறது ஓய்வூதியம் போல இருக்கக்கூடாது, இது அவர்கள் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்” என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகை விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகர் விருதும், தனது பெயரை சிறந்த துணை நடிகையாக குறிப்பிடுவதும் எதன் அடிப்படையில் என்று விளக்க வேண்டும் என கேட்டுள்ளார். “என்ன கொடுத்தாலும் ஏற்கணும்” என்ற போக்கு தவறு” என்றும் கூறியுள்ளார்.

“சருக்கான், விஜயராகவன் ஆகியோரின் நடிப்பை எப்படி மதிப்பீடு செய்தார்கள்? என்ன அளவுகோல்களைக் கொண்டு அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்?” என உர்வசி கேள்வி எழுப்பியுள்ளார். “நான் நடித்த ‘ஜே பேபி’ படம் சிறந்த நடிகைக்கான பரிசுக்காக சமர்ப்பிக்கப்பட்டது, அதை ஜூரி உறுப்பினர்கள் பார்த்தார்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “நாங்கள் எல்லோரும் வரி கட்டி நடிக்கிறோம். இது பொறுப்புள்ள தொழில்தான். விளக்கமின்றி விருது வழங்கும் நடைமுறை தொடர்ந்தால், நம்பிக்கை அடியோடு நிலைநாட்டும்” என்று கூறியுள்ளார்.

“ஆடுஜீவிதம் போன்ற மலையாள படங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டன. தமிழ் சினிமாவிலும் பலர் என் மீது நடந்ததைப் பார்த்து கவலையடைந்துள்ளனர். பலரும் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்,” என்று உர்வசி தெரிவித்தார். “உள்ளொழுக்கு” திரைப்படத்தில் தனது லீலாம்மா கதாபாத்திரத்துக்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றுள்ள இவர், இதற்கு முன்பும் 2006ஆம் ஆண்டு “அச்சுவின்டே அம்மா” திரைப்படத்துக்காக அதே வகை விருதை பெற்றிருந்தார்.

அந்த வேளையில் பி. சாரோஜா தேவி, “உங்களுக்கு சிறந்த நடிகை விருது கிடைக்கவேண்டியதுதான்” என்று தனிப்பட்ட முறையில் சொன்னதாக உர்வசி நினைவூட்டினார்.

தன்னைப்போலவே பலர் இந்த நிலைமையை எதிர்கொள்வார்கள் என்பதால், இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கம் தேவை என உர்வசி வலியுறுத்தியுள்ளார். “நான் யாரையும் குறை கூறவில்லை. ஆனால் வெளிப்படையான, நியாயமான விளக்கம் கிடைக்காமல் இந்த விருதை ஏற்க விரும்பவில்லை,” என உர்வசி தனது முடிவை உறுதியாக தெரிவித்துள்ளார். “இது என் மனதைக் கலங்க வைக்கும் ஒரு விஷயம். என் பின்னாலே இன்னும் பலர் பேசத் தொடங்குவார்கள்” என அவர் கூறினார்.