அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் கட்சியின் விதிப்படி பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

‌ மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த நிலையில் அடுத்ததாக வந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததால் கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டு ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் இது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.