ரஷ்ய நாட்டில் உள்ள கம்கட்சகா தீபகற்பத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இது ரிக்டர் அளவுகோலில் 8.8 என்ற அளவில் பதிவானது. இதனால் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஏராளமான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று கம் கட் சகா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்கு ஒரு மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் மருத்துவமனை குலுங்கிய போதிலும் நோயாளியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக டாக்டர்கள் அனைவரும் அசராமல் நின்று அவருக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து முடித்தனர்.

தங்கள் உயிரை பெரிதான கருதாமல் தங்களை நம்பி வந்த நோயாளியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என அவர்கள் பூகம்பத்திலும் நின்று அந்த நோயாளிக்கு ஆபரேஷன் செய்தது நெகிழ்ச்சியாக பார்க்கப்படும் நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த நோயாளி தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலாகும் நிலையில் பலரும் மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.