இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லுத்தன் விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் கிளாஸ்கோ நகர் நோக்கி புறப்பட்ட சென்றது. அந்த விமானத்தில் இந்தியரான அபய் தேவதாஸ் நாயக் என்பவர் பயணம் செய்தார். அவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து பயணிகள் நடந்து செல்லும் வழியில் நின்று கொண்டே அமெரிக்கா ஒழிக; ட்ரம்ப் ஒழிக என கத்தி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அல்லாஹு அக்பர் என கோஷமிட்டு வெடிகுண்டை வெடிக்க செய்யப் போகிறேன் என கூறியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சக பயணிகள் இரண்டு பேர் எழுந்து சென்று அவரை பிடித்து தரையில் உட்கார வைத்தனர்.

இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. விமானம் தரையிறங்கியதும் அந்த நம்பரை விமான ஊழியர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் எதற்காக விமானத்தில் கோஷமிட்டார் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.