ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே அமைந்துள்ள குரில் தீவுகளின் கடல் பகுதியில் இன்று காலை 10.57 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, 49.51 டிகிரி வடக்கு அகலநிலை மற்றும் 158.75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் அதிகாரப்பூர்வ தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதும், அப்பகுதியில் திடீரென நிலம் அதிர்ந்ததால் மக்கள் பெரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியே ஓடியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து இதுவரை எந்தவிதமான உயிர்சேதம் அல்லது உடைமையிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது. பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
குறிப்பிடத்தக்க விஷயமாக, இதற்கு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது நேற்று காலை 8 மணி அளவில் இதே பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது அந்தக் கடற்கரைப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.
EQ of M: 6.5, On: 31/07/2025 10:57:14 IST, Lat: 49.51 N, Long: 158.75 E, Depth: 10 Km, Location: East of Kuril Islands.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/eLFmaxTfZ3— National Center for Seismology (@NCS_Earthquake) July 31, 2025
“>
மேலும், பசிபிக் கடற்பகுதியில் நிலநடுக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளாக இருப்பதாலும், சுனாமி எச்சரிக்கை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் அந்த பகுதியில் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
