அமெரிக்காவின் சான் டியாகோவில் வசிக்கும் 25 வயது டயானா மொன்டானோ, தன்னைவிட 51 வயது மூத்தவரான 76 வயது எட்கரை காதலித்து வருவது, தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

“வயது என்பது வெறும் எண்” என்ற கருத்தை தன்னுடைய வாழ்வால் நிரூபிக்க முயற்சி செய்கிறார் டயானா. அவர், “எட்கரையே மட்டுமே நான் திருமணம் செய்யப்போகிறேன், குடும்ப உறுப்பினர்கள் கோபமாக இருந்தாலும் என் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Partnerphilia (@partnerphilia)

முதல்முறையாக முன்னாள் காதலியின் வழியாக சந்தித்த இருவரும், பின்னர் தொடர்பில் இருந்து ஒரு வருடம் டேட்டிங் செய்துள்ளனர். 2023 ஜூலை மாதத்தில் எட்கர் டயானாவிடம் காதலை வெளிப்படுத்த, அவர் உடனே ‘ஆம்’ சொன்னார்.

ஹவாய்க்கு சென்ற காதல் பயணத்தில், “நான் இளமையாக இருந்திருந்தால், உன்னை திருமணம் செய்திருப்பேன்” என எட்கர் சொன்னதற்கே, “நான் தயாராக இருக்கிறேன்” என பதிலளித்த டயானா, தன்னுடைய உறவை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரது குடும்பம் மட்டும் இந்த உறவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். “நீ வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறாய்” என்று பலர் கண்டித்துள்ளனர். ஆனால் டயானா, “நான் வயது வந்த பெண். என் முடிவை எடுக்க எனக்கு உரிமை உள்ளது. எட்கருடன் இருக்கும் உறவு உண்மையானதும், மகிழ்ச்சியானதும்” என தனது உரிமையை உறுதியாக தெரிவிக்கிறார். அவருக்கு ஆதரவாக இருப்பது அவரது அத்தை மட்டுமே.

இந்த காதல் கதை சமூக ஊடகங்களில் வெளியானவுடன், பலரும் அதனை “அருவருப்பானது”, “இயற்கைக்கு மாறானது” என விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், காதல் என்பது காலத்தையும், வயதையும் கடந்து வெல்லக்கூடியது என்பதை டயானா-எட்கர் ஜோடி நிரூபிக்க முயற்சி செய்கிறது.