குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியா தளங்களை பயன்படுத்துகின்றனர். யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களில் வீடியோ பதிவிடுவது, வீடியோ பார்ப்பது, லைக்ஸ் வாங்குவது, கமெண்ட் செய்வது என நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சிலர் யூடியூப் சேனல் நடத்தி அதன் மூலம் சம்பாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 16 வயதிற்கு உட்பட்டோர் யூடியூப் சேனல்களை நடத்த ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் மாதம் முதல் அமலாக உள்ளது. யூடியூப் கிட்ஸ் ஆப்பை பயன்படுத்தி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட், பேஸ்புக், டிக் டாக், எக்ஸ் ஆகிய தளங்களை சிறார்கள் பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கதாகும்.