பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஷேர் சாட், டிக் டாக் மற்றும் எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல்முறையாக இது போன்ற சமூக வலைத்தளங்களை உபயோகிக்க ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. இந்த சட்டம் கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா நாட்டில் கொண்டுவரப்பட்டது.

தற்போது தடை செய்யப்பட்ட வலைத்தளத்தில் youtube செயலியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியா நாட்டு அரசு கூறியதாவது, 16 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் youtube செயலியை பயன்படுத்த தடை. அதாவது குழந்தைகள் youtube செயலியை பயன்படுத்தலாம். ஆனால் தங்களுக்கென தனி யூடியூப் சேனல் வைக்க அனுமதி கிடையாது. சமூக வளைதளங்களை  வயது வரம்புக்கு உட்பட்ட தளங்கள் என்று வரையறை செய்ய வேண்டும் என ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்புத்துறை மந்திரி கூறியுள்ளார்.

இந்த திட்டம் வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும். இதுவரை 16 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தங்களுக்கு தனி சேனல் வைத்திருந்தால் அதனை நீக்க வேண்டும். அவ்வாறு சட்டத்தை மீறி கணக்குகளை நீக்க தவறினால் சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள் மீது 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தொடர்புத்துறை மந்திரி கூறியதாவது, ஆஸ்திரேலியாவில் youtube சேனல் உபயோகிக்கும் 10-ல் 4 குழந்தைகள் அதில் வரும் கருத்துகளால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வு கூறுகிறது. இவ்வகை திட்டம் குழந்தைகள் நலன் கருதி எடுக்கப்பட்டது.  இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த youtubeயின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஒரு அறிக்கை வெளியிட்டது.

குழந்தைகளுக்கு ஆன்லைன் பாதிப்புகளை குறைப்பது தொடர்பாக எடுக்கப்பட இந்த முடிவை  நாங்கள் மதிக்கிறோம். அதே சமயம் youtube என்பது இலவச உயர்தர வீடியோவை  உள்ளடக்கிய  நூலகம்.  இது தொலைக்காட்சி திரைகளில் அதிகமாக பார்க்கப்படுகிறது. இது சமூக ஊடகம் அல்ல. இந்த விவகாரம் குறித்து நாங்கள் ஆஸ்திரேலியா அரசாங்கத்துடன்  பேச்சுவார்த்தை நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் பிரதமர் கூறுகையில், வருகிற செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய மாநாடுகள் மன்றத்தில் குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை தடை செய்வது தொடர்பாக ஆஸ்திரேலியா அரசு பிரச்சாரம் செய்யும் என கூறியுள்ளார். இது ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமன்றி மற்ற எல்லா நாடுகளுக்கும் பொதுவான விவகாரமாகும்.