சவுதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ராட்டினத்தில் மக்கள் உட்கார்ந்திருந்தனர். அந்த ராட்டினம் இயங்கும் போது திடீரென அதன் ஒரு பகுதி உடைந்து ராட்டினம் தரையில் விழுந்ததால் மக்கள் அலறி சத்தம் போட்டனர்.
இந்த கோர சம்பவத்தில் 23 பேர் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#SunNews | #SaudiArabia pic.twitter.com/BNkSB4AgPM
— Sun News (@sunnewstamil) July 31, 2025
