ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நர்சரி வகுப்புக்கான வருடாந்த கட்டணமாக ரூ.2,51,000 என குறிப்பிடப்பட்டுள்ள தகவல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, கல்விக்கான மலிவு மற்றும் சமத்துவ அணுகல் குறித்து பலரும் கேள்விகள் எழுப்பியுள்ளனர். தர்மா பார்ட்டி ஆஃப் இந்தியா நிறுவனரும் சமூக செயல்பாட்டாளருமான அனுராதா திவாரி, “இப்போது ABCD கற்றுக்க மாதத்திற்கு ரூ.21,000 செலவா? இது என்ன அபத்தமா இருக்கே!” என சமூக வலைதளத்தில் பகிர்ந்த தகவல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

“>

இந்த பள்ளியின் கட்டண பட்டியலில், முன் தொடக்கப்பள்ளி I மற்றும் II வகுப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.2,42,700 எனவும், 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கு ரூ.2,91,460 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பல இணையவாசிகள், “இந்த கட்டணத்திற்கு என்ன விதமான கற்பித்தல்? சாதாரண குடும்பங்கள் எப்படி இதை சமாளிக்க முடியும்?” என கேள்விகள் எழுப்பியுள்ளனர். மேலும், சிலர், “இந்த பள்ளிகளில் படிக்க முடியாவிட்டால் போனாலும் பரவாயில்லை. பிறர் பிழைப்பதற்காக கடனில் விழ வேண்டாம்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், CoinSwitch மற்றும் Lemonn நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால், கல்விச்செலவுகள் குறித்தும், அதன் மீது பெற்றோர் எடுக்கும் EMI கடன்களையும் குறிப்பிடும் வகையில் LinkedIn-இல் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “மழலையர் பள்ளிக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10-30% உயர்வதாலும், இதனால் பெற்றோர்களின் வருமான வளர்ச்சியைவிட கல்விச் செலவுகள் வேகமாக உயர்ந்து வருகின்றன” என கூறியுள்ளார். தற்போது கல்விக் கட்டணங்கள் வீட்டு வருமானத்தில் மூத்த 19% வரை செலவாகின்றன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கான பதிலை  தனியார் பள்ளி தற்போது வரை வழங்கவில்லை.