திருவெறும்பூர் அருகே கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் காய்கறி வியாபாரியான மூக்கையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் 17 வயதில் ஒரு மகளும் இருந்துள்ளார். இவர்களது மகள் பெல் நிறுவனத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேஸ்வரி மற்றும் மூக்கையனும் இருவரும் வேலைக்கு கிளம்பிய நிலையில் மாணவியும் பள்ளி சீருடை அணிந்து பள்ளிக்கு கிளம்பினார். ஆனால் மாணவி பள்ளிக்கு செல்லவில்லை. அதோடு வீட்டின் கதவும் நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்கள் மாணவியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

மேலும் இது தொடர்பாக தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.