சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள எழுச்சி பயணத்தில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் தொடரும் என்றும் மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும் வரை ஓய்வதில்லை என்றும் கூறினார். விவசாயிகள் பயிர் கடன் பெறுவதில் பெரும் சிக்கல் நிலவுவதை சுட்டுக்காட்டிய அவர் விவசாய பயிர் கடன் வாங்குவது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது.

இது விவசாயிகளுக்கு கடும் கடன் பெறுவதை தடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து பேசிய அவர் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் தொடரும் என்று கூறினார். இந்தப் பயணத்தை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி மேலும் 10 மாவட்டங்களில் 46 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்துள்ளோம் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது மக்களே மக்களை பாதுகாத்துக் கொள்ளும் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று விமர்சித்த அவர் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டதற்கு பதில் அளித்த அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும், பாஜகவும் அங்கம் வகிக்கிறது. பாஜகவுடன் சில கட்சிகள் கூட்டணியில் இருக்கிறார்கள். இன்னும் தேர்தலுக்கு 8 மாதம் உள்ளது. தேர்தல் நேரத்தில் எங்கள் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிவிப்போம் என்று கூறினார்.