கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த கன்னையா லால் என்பவர் மாகடி சாலையில் நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.30 மணி அளவில் கடையில் வேலை பார்க்கும் நபர் கடை அடைப்பதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது கன்னையா லாலும் அருகில் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் கடைக்குள் திடீரென 3 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்களில் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் கடையில் வேலை பார்க்கும் நபரையும், கண்ணையா லாலையும் மிரட்டியுள்ளார்.
பின்பு அவருடன் சென்ற மற்ற 2 நபர்களும் கடையிலிருந்து சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அப்போது கன்னையா லால் உதவி கேட்டு அக்கம் பக்கத்தினரை சத்தம் போட்டு அழைத்தபோது கொள்ளையர்கள் அவர்களை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து கன்னையா லால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பேரை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து அங்கு பொறுத்தி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரரப்பு நிலவியது.
