உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கட்டௌலி கோட்வாலி பகுதியில் மனதை உருக்கும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  செவ்வாய்க்கிழமை காலை சாலையில் நடந்து சென்ற ஒரு இளைஞர் திடீரென ஓடி வந்து, லாரியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திலேயே லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி அவர் உயிரிழந்தார். அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த துயரமான சம்பவம் முழுவதுமாக பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரை உடனடியாக கட்டௌலி அரசுப் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

“>

 

இதையடுத்து போலீசார் இறந்த உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஆனால் இறந்த இளைஞரது அடையாளம் இதுவரை தெரியவில்லை. அவரது பெயர், முகவரி போன்ற விவரங்களைப் பெற போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.அந்த இளைஞரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று போலீசார் தெரிவித்தனர்.