பீகார் மாநிலத்தை சேர்ந்த அவனீஷ் குமார் என்ற இளைஞர், எந்தவொரு இன்ஜினியரிங் படிப்பும் இல்லாமல், வெறும் 7,000 ரூபாய் செலவில் புழக்கமற்ற பொருட்களை வைத்து ஒரு விமானத்தை உருவாக்கி பறக்கவிட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

விமானத்தை உருவாக்குவது மிகுந்த செலவிலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்திலும் நடைபெறும் ஒரு செயல்பாடாக இருக்க, அவனீஷ் தனது தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி வெறும் ஒரு வாரத்தில் தனது சொந்த விமானத்தை உருவாக்கி அதனை வெற்றிகரமாக பறக்கவிட்டுள்ளார்.

விமானத்தைக் கையாளும் பணியையும் அவர் தான் செய்துள்ளார். விமானம் பறக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சைண்டிஸ்டுகளும், பொதுமக்களும் இளைஞரின் திறமைக்கு பெருமையோடு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். விமானம் பறக்கும் நேரத்தில் பல இளைஞர்கள் நேரில் வந்து அதை கண்டு வெகுவாக ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பீகாரின் இந்த இளைஞர், “திறமைக்குப் பட்டமும் பணமும் தேவையில்லை” என்பதற்கேற்ப ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். அவரது சாதனை இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும், தெளிவான முன்மாதிரியாகவும் திகழ்கிறது.