தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சோகமூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற 25 வயது இளைஞர், நண்பர்களுடன் சேர்ந்து ஷட்டில் (பாட்மின்டன்) விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இளம் வயதில் உள்ள ஒருவருக்கு உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் இதுபோன்ற மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற திடீர் மரணங்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உடல்நல பரிசோதனையின் அவசியத்தையும் வலியுறுத்தும் சம்பவமாக இது அமைந்துள்ளது.
#JUSTIN ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு ராகேஷ் (25) என்ற இளைஞர் உயிரிழப்பு #Hyderabad #ShuttleCock #HeartAttack #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/6KpfSffhjn
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 28, 2025
“>
