ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில், பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 3 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து, தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க ‘ஆபரேஷன் மகாதேவ்’ எனப்படும் மிஷன் மூலம் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பகுதியாகவே இந்த 3 தீவிரவாதிகள் இடம்கொடுத்த பதிலடியில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பகல்காம் தீவிரவாதிகளா என விசாரணை நடைபெற்றுவருகிறது.  இந்த நடவடிக்கைகள், இந்திய பாதுகாப்புப் படையின் தைரியத்தையும், விரைவான பதிலடிச் செயல்முறையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.