சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டத்தில் உள்ள நர்மதேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த ஒரு அதிசய சம்பவம் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 25ஆம் தேதி, கோவிலுக்குள் வந்த ஒரு பாம்பாட்டி, தனது கூடையில் இருந்த பாம்பை வெளியிட்டபோது, அந்த பாம்பு நேராக சிவலிங்கம் மீது ஊர்ந்து சென்று அதை சுற்றியது. கோவிலில் கூடியிருந்த மக்கள் அனைவரும் இந்த அரிய தரிசனத்தை வெகு கவனமாக பார்த்து, வணங்கி, செல்போன்களில் வீடியோ எடுத்து பதிவு செய்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by ABP News (@abpnewstv)

பாம்பு நீண்ட நேரம் சிவலிங்கத்தை அமைதியாக சுற்றிக் கொண்டிருந்தது. ஆன்மீக ரீதியாக இது ஒரு அருள் தரிசனமாக கருதப்பட்டது. பலர் இதை சிவபெருமானின் அருளின் அடையாளமாகக் கொண்டு “ஹர் ஹர் மகாதேவ்” என கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, “சிவ்லிங் மிராக்கிள்” எனும் பெயரில் வைரலானது. பக்தர்களிடையே ஆன்மீக உணர்வை தூண்டிய இந்த சம்பவம், நர்மதேஷ்வர் கோவிலின் புகழை மேலும் உயர்த்தியுள்ளது.