டெல்லியில் சக மாணவன் ஒருவனால் மாணவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் தேதி சக மாணவன் ஒருவன் 14 வயது மாணவனை கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதில் அந்த சிறுவன் வலியை அனுபவித்தான்.
அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் இருந்த நிலையில் பெற்றோர் இது குறித்து விசாரிக்கவே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டதோடு மருத்துவ அறிக்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட சிறுவனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
