பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்து ரூபாய் 4800 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக அவர் செல்லும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தாமதப்படுத்துவதால் மத்திய அரசுக்கு எதிராக கண்டன போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார். இதனை அடுத்து திருச்சி சிவா காமராஜர் பற்றி அவதூறு கருத்து கூறியதை தவிர்த்து இருக்க வேண்டும். அதற்காக உண்மையிலேயே நாங்கள் வருத்தப்பட்டோம்.
அதற்கு சரியான முறையில் கண்டனத்தையும் வெளிப்படுத்தினோம். முதலமைச்சர் பெரிது படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்ட காரணத்திற்காக விவகாரத்தை பெரிது படுத்தவில்லை. இதைத் தாண்டி திருச்சி சிவா கூறியதற்காக தடியெடுத்தா போராட்டம் நடத்த முடியும்? அதை தான் இங்கு பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் “இவ்வாறு அவர் பேசினார்.
