சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து  வந்த நிலையில் இன்று விலை  அதிரடியாக குறைந்துள்ளது.

இன்று (ஜூலை 26) மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இதனால், 1 கிராம் தங்கம் ரூ.9,160 என்றும், ஒரு சவரன் ரூ.73,280 என்றும் விற்பனையாகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்க விலை உயரும் நிலையில் இருந்தபோதும், கடந்த மூன்று நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,700 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.