“தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  அதிரடியாக நுழைந்து நடத்திய  ரெய்டு, தற்பொழுது தென் மாவட்ட அரசு வட்டாரங்களையே ஆட்டிப்படைத்து வருகிறது.

அங்குள்ள சார்பதிவாளர் (Sub-Registrar) அலுவலகத்தில் விடிய விடிய சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த அதிரடி லஞ்ச ஒழிப்பு விசாரணையின் போது, கணக்கில் வராத லஞ்சப் பணம் 20 ஆயிரம் ரூபாய் பிடிபட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனை ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, விசாரணைக்கு பயந்து சார்பதிவாளர் அங்கிருந்து திடீரென ஓட்டம் பிடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தான் தற்போதைய ஹாட் டாபிக்! லஞ்சப் பணம் சிக்கியது குறித்தும், சார்பதிவாளர் எஸ்கேப் ஆனது குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடமும், அங்குள்ள மற்ற ஊழியர்களிடமும்  கேள்வி எழுப்பிய போது, அவர்கள் அதற்குப் பதிலளிக்க முற்றிலும் மறுத்து மௌனம் காத்தனர். இந்த விவகாரத்தால் போடிநாயக்கனூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.”

“>