டெல்லியில் விகாஸ்புரி என்ற பகுதியில் கட்டிட தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மைனர் சிறுமியுடன் நட்பாக பழகியுள்ளார். அதன் பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பலமுறை அந்தச் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி கட்டிட தொழிலாளி மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அந்த மனுவில் பாலியல் உறவில் ஈடுபட்ட போது அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகிவிட்டது என்றும் அவருடன் நட்பாக பழகி அவரது சம்மதத்துடன் தான் உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தோழியாக இருந்தாலும் சம்மந்தமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை கிடையாது என்று குறிப்பிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கல்வி சான்றிதழ்களின் அடிப்படையில் சம்பவம் நடந்தபோது அவர் மைனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டிருந்தாலும் அது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்து மனுதாரரின் ஜாமினை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.