திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் ஊட்டி அணி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கூலி வேலை பார்க்கும் ரமேஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியை உல்லாசத்திற்கு வருமாறு அழைத்து தொந்தரவு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரமேஷ் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த போது அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ரமேஷ் நான் உனக்கு வேண்டாம். நான் கட்டிய தாலி மட்டும் வேண்டுமா? என கேட்டு தகராறு செய்து செல்வியின் கழுத்தைப் பிடித்து நெரித்து கொலை செய்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு இரண்டு மகன்களும் ஓடி வந்த போது செல்வி தரையில் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.