2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கத்தின் மூலமாக கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். இதே போல அதிமுகவும் தங்களது கட்சியை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நடந்த இணைப்பு விழாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அந்த வகையில் இன்று பட்டுக்கோட்டையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
