சென்னை: சட்டமன்ற தேர்தல் பரபரப்பை முன்னிட்டு, மாற்றுக்கட்சியினரைக் இழுக்கும் நடவடிக்கையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற இணைப்பு விழாக்களில், 3000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று பட்டுக்கோட்டையில், திமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்த 500-க்கும் மேற்பட்டவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதில், முக்கிய பிரமுகர்களும், திமுகவில் நீண்ட காலமாக இருந்த பொறுப்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணைப்பு விழா நிகழ்வுகளில், அதிமுகவின் வளர்ச்சி, மக்கள் நம்பிக்கை, தற்போதைய ஆட்சியில் காணப்படும் மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பாக பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த புதிய இணைவுகளால், எதிர்கால தேர்தலில் அதிமுகவுக்கு வலுவான ஆதரவு உருவாகும் என கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
