சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினேகா  மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது வட மாநில பெண் தோழியுடன் வீட்டிலிருந்து மாநில கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவை புக் செய்த நிலையில், அவர்களின் வீட்டிற்கு வந்த ஆட்டோ அவர்களை ஏற்றுக் கொண்டு மாநில கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் ஆட்டோ ஓட்டுனரான ஆயிரம் விளக்கு என்பவருக்கும், சினேகாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சினேகா ஆட்டோ ஓட்டுனர் பிரசாத்தை செருப்பால் அடித்து தாக்கியுள்ளார். பின்னர் ம.நீ.ம கட்சியின் நிர்வாகியான சினேகா ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதியிடம், பிரகாஷ் “தன் மீது எந்த தவறும் இல்லை. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வேறு வழியில் செல்லலாமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அநாகரிகமாக பேசினார்கள்.

அதன் பின் நான் கோபமடைந்த போது அவர்கள் வீடியோ எடுக்க தொடங்கினார்கள்” என்று கூறினார். அவர் பேசியதை கேட்ட நீதிபதி அவரை ஜாமினில் விடுதித்தார். அதன் பின்னர் ஆட்டோ ஒட்டுநர் பிரசாத்திடமிருந்து புகார் மனு பெறப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண் நிர்வாகியான சினேகா மோகன்தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நேற்று காலை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்ற சினேகா மோகன்தாஸை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின் காவல் நிலைய ஜாமினில் காவல்துறையினர் சினேகா மோகன் தாஸ் விடுவித்ததாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினேகா மோகன் தாஸ் ஆட்டோ ஓட்டுநரை அடித்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.