ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே உள்ள கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பாதசாரியாக கோயிலுக்கு சென்றவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே இரண்டு பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அடையாளம் தெரியாத வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பவம் இடத்தில் பரபரப்பு நிலவ, உயிரிழந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
