தர்மபுரி மாவட்டத்திலுள்ள உழவன் கோட்டை பகுதியில் ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து செல்லும்போது திடீரென ஸ்டியரிங் கட்டாகி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. அந்தப் பேருந்து திடீரென ராமு என்பவரது வீட்டின் சுவரின் மீது மோதி நின்றது.

இந்த பேருந்து வந்த வேகத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அத்விகா என்ற சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நரசிம்மன் சோனியா தம்பதியின் மகள் உயிரிழந்த நிலையில் தற்போது அரசு பேருந்து ஓட்டுனர் பலத்த காயமடைந்து ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் இருக்கிறார்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.