கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் மிட்டாயில் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பத்தினம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (31) என்ற பெண் ஒருவர் ஓமனிலிருந்து விமானத்தில் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு அவரது உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பின் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை அழைத்துச் செல்ல அவரது 3 நண்பர்கள் வந்துள்ளனர். அவர்களது நடவடிக்கைகள் சந்தேக ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் காவல்துறையினர் அவர்களை அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது சூர்யா மிட்டாய் பாக்கெட்டில் மறைத்து வைத்து 1 கிலோ எம்டிஎம்ஏ போதை பொருள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து சூர்யா உட்பட அவரது நண்பர்களான மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவரங்காடி அருகே உள்ள முன்னையூர் கிராமத்தைச் சேர்ந்த அலி அக்பர் (31), சபீர் (30), மற்றும் வள்ளிக்குன்னு பகுதியை சேர்ந்த முகமது ராபி (37) ஆகிய 4பேரையும் கைது செய்தனர். அவ்ர்களிடசம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.