மாதம் முழுவதும் கடுமையாக உழைத்தாலும் சில ஆயிரங்களைத் தாண்ட முடியாதவர்கள் தான் மிக அதிகமாக உள்ளனர். அதேபோன்று பலரும் படித்தும் வேலை கிடைக்காமல் அலைந்து திரிகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கையை மிகவும் மோசமாக மாறியுள்ளது. ஆனால் மகாராஷ்டிராவை சேர்ந்த நாய் நடைபயிற்சி நிபுணர் ஒருவர் தினமும் 38 நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்.

இதன் மூலம் அவர் மாதத்திற்கு ரூபாய் 4.5 லட்சம் வரை சம்பாதிக்கிறார். ஒரு நாயை இரண்டு முறை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்ல இவர் ரூபாய் 15,000 வரை கட்டணமாக வசூலிக்கிறார். இது பல டிகிரி முடித்தவர்கள் மற்றும் அவரது MBA படித்த சகோதரர் சம்பாதிக்கும் வருமானத்தை விட அதிகமாகும்.