தென்கொரியாவில் தற்போது பெய்து வரும் கனமழையால் அந்நாட்டில் உள்ள பல பகுதிகள் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் கியோங்கி மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கின் போது சிக்கிய சிலர் காயம் அடைந்துள்ள நிலையில், 14 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணியினர் தொடர்ந்து மீட்பு பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கனமழையால் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
