சீனாவின் சோங்சிங் நகரில் ஜூலை 16ஆம் தேதி, ஒரு சிறுவன் எஸ்கலேட்டரின் விளிம்பில் அருகிலிருந்த சுவருக்கும்  கதவுக்கும் இடையே தலையை சிக்கிக்கொண்டதை குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த கடுமையான தருணம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவன் சிக்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது பலர் கவலையோடு பார்க்கும் வகையிலும், சிலர் நகைச்சுவையாக கருத்துக்களும் பதிவிடுகின்றனர்.

விபத்து நடந்த அதே நேரத்தில் அருகிலிருந்த சில நபர்கள் துரிதமாக எஸ்கலேட்டரை நிறுத்தியதால், பெரிய விபத்தை தவிர்க்க முடிந்தது. சிறுவன் தனது ஆர்வத்தில் தலையை சுவருக்கும், எஸ்கலேட்டருக்கும் இடையில் நுழைத்ததாக கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sharing Travel (@livingchina)

எஸ்கலேட்டர் நின்ற பிறகும் சிறுவன் தன்னுடைய தலையை வெளியே எடுக்க மிகவும் போராடி கொண்டிருந்தார். அருகிலிருந்த மக்கள் அனைவரும் சேர்ந்து சிறுவனை பாதுகாப்பாக வெளியே இழுத்து காப்பாற்றினர்.

சிறுவன் எந்தவித காயமும் இல்லாமல் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வீடியோவை @livingchina என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டுள்ளது.

அதில், “The explorer’s childhood. Hope he will be smarter in the future.” எனும் வர்ணனையுடன் பகிரப்பட்டுள்ளது. இதேபோல், சில நாட்களுக்கு முன்பு ஒரு போதையில் இருந்த நபர், மதுபான கடையின் இரும்புக் கூண்டுகளில் சிக்கிக்கொண்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

அந்த நபர் கடையின் பாட்டிலை எடுக்க முயன்றபோது சிக்கிக்கொண்டதாகவும், பிறகு கடையின் பிற வாடிக்கையாளர்கள் சேர்ந்து அவரை மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.