காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக மே 7-ஆம் தேதி இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இ
தில், பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்புகளும் துல்லியமாக குறிவைத்து தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான செயற்கைகோள் படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
குறிப்பாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள கிரனா மலைப்பகுதியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் விளைவுகள் இந்த படங்களில் காணப்படுகின்றன. இந்த மலைப்பகுதி, பாகிஸ்தானின் முக்கிய அணு ஆயுத சேமிப்பு மற்றும் சோதனைத் தளமாக 1980-ம் ஆண்டுகளிலிருந்து செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது கிரனா மலை பகுதிகளை தாக்கியதாக வரும் தகவல்களை இதுவரை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
