கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் பயங்கடி பகுதியைச் சேர்ந்த ரீமா (வயது 30) கடந்த சில வருடங்களாக தனது 3 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்த ரீமா, உறவினர்களிடமும் தெளிவான தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று  அதிகாலை 1 மணியளவில், ரீமா தனது ஸ்கூட்டரில் 3 வயது மகனை அழைத்துக்கொண்டு பயங்கடி பகுதியில் உள்ள ஒரு ஆற்றுப் பாலத்திற்கு சென்றார். அங்கு சென்றதும், தன்னுடன் இருந்த குழந்தையுடன் அந்த பாலத்தில் இருந்து நேராக ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். சம்பவத்தை அப்பகுதியில் யாரும் கவனிக்காத நிலையில், இருவரும் நீரில் மூழ்கினர்.

அதையடுத்து  தகவல் கிடைத்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பணியின் போதே ரீமாவின் சடலம் மீட்கப்பட்டது. ஆனால், அவரது 3 வயது மகனின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், குழந்தைக்கு தீவிரமாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சனை காரணமாக தாயும், தனது குழந்தையையும் இழந்தும், தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம், பயங்கடி பகுதியில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலத்தில் இருந்து குதித்த தற்கொலை முயற்சி சம்பந்தமாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்கள், தனிமை, மற்றும் மன அழுத்தம் போன்ற கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். .