மத்திய பிரதேசம் சட்டர்பூர் மாவட்டத்தின் நவ்கான் காவல் நிலையத்தில், 4 பழங்குடியின இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய கொடூரமான தாக்குதல் தொடர்பாக பரபரப்பான புகார்கள் எழுந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள், போலீசார் தங்களை நான்கு நாட்கள் காவலில் வைத்திருந்து ஆடைகள் கழற்றிக் கொடிய முறையில் அடித்து, மிளகாயை பொடியை அந்தரங்க உறுப்புகளில் திணித்ததாக தெரிவித்துள்ளனர்.
एमपी पुलिस की ST SC पर की जा रही बर्बरता का एक और उदाहरण। थाना प्रभारी नौगांव के विरुद्ध सख्त कार्यवाही होना चाहिए। @CMMadhyaPradesh @DGP_MP @INCMP https://t.co/6ytwd2QAwW
— Digvijaya Singh (@digvijaya_28) July 19, 2025
இது தொடர்பாக, நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பழங்குடியினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை இரவு 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் நடைபெற்ற நீண்ட உரையாடலுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கி
ழமை நண்பகல் 12 மணிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் நிறைவுக்கு வந்தது. போலீசார், பொதுமக்களை பாதுகாப்பாக ஊருக்குத் திருப்பி அனுப்புவதற்காக பேருந்து ஏற்பாடு செய்தனர்.
சம்பவத்தின் பின்னணி என்னவெனில், ஜூலை 15-ஆம் தேதி, நவ்கான் டிஸ்லேரி சாலையில் உள்ள புதிய வீட்டு திறப்பு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் வழியில் சிறுநீர் கழித்து கொண்டிருந்த சமயத்தில், Dial-100 என்ற போலீஸ் வாகனம் வந்து அவர்கள் 5 பேரையும் காரணமின்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.
இதில் ஒருவரை மட்டுமே உடல் நலம் காரணமாக விட்டுவிட, மீதமுள்ள நால்வரையும் காவல் நிலையத்தில் தலைகீழாக தொங்க விட்டு தாக்கி, திருட்டை ஒப்புக்கொள்ள மிளகாயை அந்தரங்க உறுப்புகளில் திணித்தும் துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போலீசார், இளைஞர்களை டிரான்ஸ்ஃபார்மர் எண்ணெய் திருட்டு வழக்கில் கைது செய்ததாக கூறினாலும், அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
