வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சுண்ணாம்பேட்டை பகுதியை அமைந்துள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்துக்கு பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த நிலையில், அரசு பேருந்து ஆம்புலன்ஸ்க்கு வழி விடாததாக கூறப்படுகிறது.
அதாவது அரசு பேருந்தின் ஓட்டுநர் வழியில் இருந்த உணவகத்தில் புரோட்டா வாங்குவதற்காக அரசு பேருந்து நிறுத்தியுள்ளார். பின்னால் ஆம்புலன்ஸ் வருவதை அறிந்தும் ஓட்டுனரும், நடத்துனரும் சேர்ந்து பேருந்தை நிறுத்திய நிலையில் அலட்சியமாக புரோட்டா வாங்க சென்றுள்ளனர். அந்த சாலை குறுகியதாக இருந்ததால் நோயாளியை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்புலன்ஸ் முன்னே செல்ல முடியாமல் அதே இடத்தில் நின்றது.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் கூறும் போது “அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது”என்று கூறினார். மேலும் அரசு பேருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
