மத்தியப் பிரதேச மாநிலத்தின் மைஹார் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் விற்பனை நடைபெற்று வந்த அதிர்ச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஆம்புலன்ஸ், இப்போது சட்டவிரோத போதைப் பொருள் விற்பனையின் மூலதனமாக மாறியுள்ளது. இந்த வாகனத்தில் சுகாதாரத் துறையின் லோகோ தெளிவாக காணப்பட்டதால், இது அரசு ஆம்புலன்ஸ் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

 

சம்பவத்தைக் கண்ட சில இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இது விரைவில் பிரபலமடைந்தது. அந்த ஆம்புலன்ஸில் புகையிலை, குட்கா, சிகரெட் மற்றும் பீடிகள் பாக்கெட் தொங்கவைக்கப்பட்டிருந்தது. மக்கள் வேதனைத்துடன் தெரிவித்ததாவது, “நோயாளிகள் உயிரிழப்பதைப் பார்க்க வேண்டிய அவசர வாகனம் இப்படி வணிகம் செய்யப் பயன்படுத்தப்படுவது வெட்கக்கேடாகும்” எனக் கூறினர்.

இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தும், தற்போது வரை சுகாதாரத் துறை அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எந்தவிதமான அதிகாரபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இது, நிர்வாகம் ஏற்கனவே தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க மறுத்ததா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.