இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Delhi metro 😭 pic.twitter.com/BZt0gyEoVA
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 18, 2025
அதாவது அந்த வீடியோவில் டெல்லி மெட்ரோ ரயிலில் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்த நபர் தனது தலையில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு நடனம் ஆடுகிறார். அவர் தனது கை மற்றும் கால்களை அசைத்து நடனமாடுகிறார். சிறிது நேரத்தில் அவர் குதித்து குதித்து நடனம் ஆடினார். இதனை பார்த்து அங்கிருந்த மற்ற ரயில் பயணிகள் சிரித்துக்கொண்டு ரசித்தனர்.
மேலும் அங்கிருந்தவர்களில் சிலர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
