தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த ஜூலை 18ஆம் தேதி அன்று நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கில் குற்றவாளிகளான நடராஜபுரம் பகுதி சேர்ந்த டியோ முருகன் (27), ரஹமதுல்லாபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் (23), மற்றும் பூபாண்டிபுரம் பகுதியை சேர்ந்த சடமாரியப்பன் (23) ஆகியோரை மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் மற்றும் கலெக்டரின் உத்தரவின் பேரில் வடபாகம் காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை தரப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 76 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.