நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வருகிற 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்காளதேசம், மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஜூலை 24ஆம் தேதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக்கப்படும் எனவும் இதனால் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.