பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் மின்தா குமாரி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் சம்பவநாளில் பள்ளிக்கு செல்லும் தனது குழந்தைகளுக்கு தலை சீவுவதற்காக கூரையிலிருந்து சீப்பை எடுக்க முற்பட்டார். அப்போது சீப்பை சுற்றியிருந்த பாம்பு ஒன்று மின்தா குமாரியை கடித்து விட்டது. பாம்பு கடித்த உடனே அவரது உடல் முழுவதும் விஷம் பரவிய நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக மின்தா குமாரி உயிரிழந்து விட்டார். அதனை கேட்ட அவரது கணவரும், குழந்தைகளும் கதறி அழும் நிலையில் முழு கிராமத்தையும் துக்கத்தில் ஆழ்ந்தது.

இது குறித்து கிராம தலைவர் ஷ்ரவன் குமார் கூறும் போது, “மழைக்காலத்தில் இது மாதிரியான விஷவாயு பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். எனவே பழைய பொருட்கள், மரச்சீப்புகள் போன்றவற்றை வைப்பதற்காக கூரைகளை பயன்படுத்தும் போது முன் சிறப்பு கவனம் தேவை” என்று எச்சரித்துள்ளார். அதோடு “வீடுகளுக்கு சுற்றிலும் சுண்ணாம்பு மற்றும் ஃபினாயில் தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த சம்பவத்திலிருந்து ஒரு சிறிய அலட்சியம் கூட முடிவே இல்லாத பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும் பாம்பு கடித்த மின்தா குமாரி உயிரிழந்த சம்பவம் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட துயரமாக மட்டுமல்லாமல் ஒரு சமூகத்தின் விழிப்புணர்விற்கும் காரணமாக அமைய வேண்டும் என்றும், கிராமங்களில் பாம்பு மற்றும் விஷங்களுக்கான முன்னெச்சரிக்கைகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.