கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் பரவி வருகிறது. அதன்படி பாலக்காடு, மலபுரத்தில் 3 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களிடம் தொடர்பில் இருந்த 675 வேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலக்காடு பகுதியில் வசிக்கும் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த தொற்றால் 57 வயதான நபர் உயிரிழந்த நிலையில், அவரது மகனுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. அவருடன் 46 பேர் தொடர்பில் இருந்துள்ளனர்/ அவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மன்னார்காடு பகுதியில் வசிக்கும் பாரூக் என்பவர் தப்பி வெளியேற முயன்றுள்ளார். அவர் பைக்கில் தப்ப முயன்ற போது காவல்துறையினர் அவரை சுற்றி வளர்த்தனர். எனினும் அவர்களிடம் பாரூக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பின்னர் மோதலாக மாறியது. இதனால் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
