தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் இளம்பரிதி(27). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சௌமியா(23). இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் தேஜாஸ்ரீ என்ற மகள் உள்ளார். நேற்று இரவு கம்பம் விவேகானந்தர் ஒன்றாவது தெருவில் இருக்கும் கடையில் டீ குடித்துவிட்டு இளம்பரிதி வெளியே வந்தார்.
அப்போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாளால் இளம் பகுதியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் இளம்பரிதி அலறி துடித்த படி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
அதேநேரம் சுமை தூக்கும் தொழிலாளியான ஈஸ்வரன் என்பவர் துணிச்சலாக செயல்பட்டு அந்த கும்பலை தடுக்க முயன்றதால் அவரையும் வெட்டி விட்டு அவர்கள் தப்பி சென்றனர். இந்த கோர சம்பவத்தில் இளம் பரிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஈஸ்வரன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈஸ்வரனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இளம்பருதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
